ரெய்டுவிமர்சனம்

 ரெய்டுவிமர்சனம்

இயக்கம்: கார்த்திக்

நடிகர்கள்: விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அட்டு ரிஷி, செளந்தர் ராஜா,

ஒளிப்பதிவு : கதிரவன்

இசை : சாம் சி எஸ்

கதைப்படி,

அட்டு ரிஷி பெரிய ரெளடி. இவரும் செளந்தர் ராஜாவும் நண்பர்கள். இவரும் ரெளடி தான். ரிஷியின் அண்ணனையும் செளந்தர் ராஜாவையும் போலீஸ் ஏசிபி’யாக வரும் விக்ரம் பிரபு கொன்று விடுகிறார்.

எதிலும் எங்கும் நேர்மை, தனது காக்கி உடைக்கு நேர்மையாக வேலை செய்து வருகிறார் விக்ரம் பிரபு.

இந்த ரெளடிகளை எதற்காக கொன்றார் என்பதற்கு விளக்கமாக ப்ளாஷ் பேக் செல்கிறது. யாரும் இல்லாமல் தனி மரமாக இருக்கும் விக்ரம் பிரபுவிற்கு ஸ்ரீ திவ்யா மீது காதல் வர, அவருக்கும் இவர் மீது காதல்.

இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த போது ரிஷியும் செளந்தர் ராஜாவும் ஸ்ரீ திவ்யாவை கொன்று விடுகின்றனர்.

பழிக்கு பழியாக நடக்கும் இந்த கொலைகளைத் தொடர்ந்து ரிஷி விக்ரம் பிரபுவிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

எப்போதும் தனக்கான கதாபாத்திரத்தை தெளிவாக முடித்துக் கொடுப்பவர் விக்ரம் பிரபு. இப்படத்திலும் அதையே செய்து முடித்திருக்கிறார்.

வலுவில்லாத கதையால் ஒட்டு மொத்த படமும் ஆட்டம் கண்டுள்ளது.

கனெக்ட் இல்லாத காட்சிகள் அதிகம் வந்ததும், எடிட்டிங் சரியான முறையில் இல்லாமல் படம் பார்ப்பவர்களை குழப்பியும் விட்டது படத்திற்கு மிகப்பெரும் சரிவு.

அட்டு படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷி இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தனக்கான கேரக்டரை தெளிவாக செய்து முடித்தாலும், கதாபாத்திரத்தோடு பெரிதாக ஒட்டாமல் இருந்தது ஏமாற்றம் தான்.

பின்னணி இசை மற்றும் பாடல் இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் இழப்பு தான்… சத்தம் சத்தம் சத்தம்… முடியல

ஒளிப்பதிவு சற்று ஆறுதல்..

கதை பெரிதான ஈர்ப்பை கொடுக்காததால் படம் பெரிதாக நம்மை கவரவில்லை..

ரெய்டு – ஈர்க்கவில்லை

Related post