ரன்பிர் கபூர் செய்தது சரியான செயல் தான்; செல்ஃபி எடுத்தால் போன் உடைப்பது தவறா?

 ரன்பிர் கபூர் செய்தது சரியான செயல் தான்; செல்ஃபி எடுத்தால் போன் உடைப்பது தவறா?

இன்று சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, செல்ஃபி எடுக்கும் ரசிகர் ஒருவரின் போனை ரன்பிர் கபூர் தூக்கி வீசும் காட்சி தான்.

அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பலரும் ரன்பிர் கபூரை குறை பேசி அவதூறு பரப்பி வருகின்றனர்.

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்” என்ற பழமொழிக்கிணங்க விசாரித்ததில் தெரியவந்த தகவல் என்னவென்றால்.

ரன்பிர் கபூரின் வீடியோ ஒரு விளம்பரப்படம் என்றும் OPPO நிறுவனத்தின் போன் விளம்பரம் அது என்றும் தெரியவந்துள்ளது.

ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்கும் போது, தெளிவில்லாத செல்ஃபி வந்ததாலும் போன் மெதுவாக செயல் பட்டதாலும். ஹீரோ கட்டுப்படைந்து போனை தூக்கி எறிவது தான் அந்த விளம்பரத்தின் கான்செப்டாம். போனை தூக்கி வீசிய கையேடு, OPPO நிறுவனத்தின் போனை ரசிகரிடம் கொடுத்து அதில் செல்ஃபி எடுப்பது ரன்பிரின் நோக்கமாம்.

இது தெரியாத பல விமர்சகர்களும், ரசிகர்களும் ரன்பிர் கபூருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Related post