ரத்தம் விமர்சனம்

 ரத்தம் விமர்சனம்

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் “ரத்தம்”.

தமிழ் படம் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய இயக்குனரிடம் இருந்து ஒரு சீரியஸ் க்ரைம் த்ரில்லர் கதையோடு ஒரு படம் வெளிவந்திருக்கிறது. எப்படி இருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

குழந்தை பிறக்கும் போது மனைவி இறந்துவிட்டதால், சென்னையை விட்டு மும்பைக்கு சென்று விடுகிறார் விஜய் ஆண்டனி. தனது ஆறு வயது மகளோடு குடிதான் வாழ்க்கையாய் வாழ்ந்து வருகிறார்.

விஜய் ஆண்டனி இந்தியாவின் உயர்ந்த இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட். அனைத்தையும் துறந்து மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் தனது நண்பனும் நிழல்கள் ரவியின் மகனுமான செழியனை ஒருவன் கத்தியால் குத்தி கொன்று விடுகிறான்.

இதனால் உடைந்து போன நிழல்கள் ரவி, தான் நடத்தி வந்த பத்திரிகை நிறுவனத்தை வந்து கவனிக்குமாறு விஜய் ஆண்டனியை அழைக்கிறார். இதற்காக சென்னை வருகிறார். அந்த பத்திரிகை நிறுவனத்தின் chief எடிட்டராக பணிபுரிகிறார் நந்திதா.

விஜய் ஆண்டனி வந்த சமயத்தில் கலெக்டர் ஒருவனால் கொல்லப்படுகிறார். இதனால் சந்தேகிக்கும் விஜய் ஆண்டனி, இந்த தனி நபர் கொலைக்குப் பின்னால் ஒரு நெட் வொர்க் இருப்பதை உணர்கிறார்.

யார் அந்த நெட் வொர்க்,.? எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்கள்.? யாருக்காக செய்கிறார்கள்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

இதற்கு முன் வெளிவந்த விஜய் ஆண்டனியின் படங்களில் இருந்து இப்படம் விஜய் ஆண்டனிக்கு சற்று மாறுபட்ட படமாகத் தான் இருக்கிறது. தனது முதிர்ச்சி நடிப்பைக் கொடுத்து குமார் கதாபாத்திரத்திற்கு பெரிதாகவே உயிரூட்டிருக்கிறார்.

தனது மனைவியை இழந்து வாழும் ஒருவாழ்க்கையாக இருக்கட்டும், தனது நண்பனை கொன்றவனை தேடும் படலத்தில் சுழன்று வேலை செய்வதாக இருக்கட்டும் இரண்டிலும் வேறு வேறு திசையான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

மஹிமா நம்பியாரின் நடிப்பு மிகப்பெரும் ட்விஸ்ட். தனது கண்களாலே மிரட்டி விடும் ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் மஹிமா. தனது கதாபாத்திரத்தை நச் என செய்து முடித்திருக்கிறார் நந்திதா.

ஆங்காங்கே வைத்திருக்கும் ட்விஸ்ட் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. விஜய் ஆண்டனி குதிரையில் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தை ரவுண்டு கட்டி அடித்தது விறுவிறுப்பு ஏற்றியது.

க்ளைமாக்ஸ் காட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்படியாகவே அமைந்தது.

பின்னணி இசை எங்கேயோ கேட்டது போன்ற ஒரு ஃபீலிங்கை கொடுத்து விட்டது. ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில்,

ரத்தம் – க்ளீன் க்ரைம் த்ரில்லர் ஸ்டோரி.. –  3/5

Related post