சபா நாயகன் விமர்சனம்

 சபா நாயகன் விமர்சனம்

இயக்கம்: கார்த்திகேயன்

நடிகர்கள்: அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம்

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ்

இசை: லியோன் ஜேம்ஸ்

கதைப்படி,

பள்ளி வாழ்க்கையில் ஆரம்பிக்கிறது அசோக் செல்வனின் காதல் பயணம். பள்ளி, கல்லூரி கடந்து பணி செல்லும் வரையில் சபா நாயகனின் காதல் பயணமாகிறது.

பள்ளி படிக்கும் போது தனது நண்பர்களுடன் ஜாலி, அரட்டை என செல்லும் வாழ்க்கையில் நாயகி கார்த்திகா முரளிதரனை காண்கிறார். இப்படி, அடுத்தடுத்த கட்டத்தில் சாந்தினி, மேகா ஆகாஷ் என மூவரையும் சந்திக்கிறார்.

மூவரின் மீதும் காதல் எழுகிறது. இதில் இறுதியாக யாரோடு அசோக் செல்வன் ஜோடி சேர்ந்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் அசோக் செல்வன், மூன்று காலகட்டத்தையும் மிக அழகாக செய்து முடித்திருக்கிறார். பள்ளி போர்ஷனில் மிக அழகாக வந்து அனைவரையும் கவர்கிறார்.

காதல் செய்வதில், ஜெமினி கணேசனாக தெரிகிறார். இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை கவரும் வகையில் தனது நடிப்பில் சுட்டித்தனத்தை கொண்டு வந்திருக்கிறார். அதுவும் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

நாயகி கார்த்திகா முரளிதரன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். காட்சிகளிலும் தேவதையாக காட்சி தந்திருக்கிறார்.

தொடர்ந்து சாந்தினி மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் தனது நடிப்பில் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

அசோக் செல்வனின் நண்பராக நடித்தவர் படத்திற்கு ப்ளஸ். மிகவும் கலகலப்பாக கதை நகர்வதால் ரசிக்க வைக்கிறது.

ஆங்காங்கே ஏற்பட்ட சில தொய்வுகளை சரி செய்திருக்கலாம். மூவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் பலம்.

லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில், பின்னணி இசை கதையோடு பயணப்பட்டுள்ளது.

சபாநாயகன் – காதல் நாயகன்.. –  2.75/5

Related post