சலார் விமர்சனம்

 சலார் விமர்சனம்

இயக்கம்: பிரசாந்த் நீல்

நடிகர்கள்: பிரபாஸ், ப்ரித்வி ராஜ், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி.

ஒளிப்பதிவு: புவன் கவுடா

இசை: ரவி பஸ்ரூர்

கதைப்படி,

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு தனது தந்தைக்கு தெரியாமல் இந்தியா வருகிறார் ஸ்ருதி ஹாசன். இதனை அறிந்த சிலர், இந்தியாவில் அவரை கடத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தனது மகளை காப்பாற்றும்படி, ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபியிடம் கேட்கிறார். இதனைத் தொடர்ந்து மைம் கோபி, மெக்கானிக் வேலை செய்து வரும் பிரபாஸிடம் கொண்டு ஸ்ருதி ஹாசனை ஒப்படைக்கிறார்.

அங்கு தங்கியிருக்கும், ஸ்ருதிஹாசனை கடத்த ரெளடி கும்பல் ஒன்று வர, தனது தாய் ஈஸ்வரி ராவ் கூறுவதை தொடர்ந்து அந்த கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார். அதுவரை பூனையாக பதுங்கிக் கொண்டிருந்த பிரபாஸ், அம்மா கூறியதும் புலியாக மாறி விடுகிறார்.

பிரபாஸ் எதற்காக பூனையாக பதுங்கி இருக்க வேண்டும்.? யார் அவர்.?? அவரின் பின்புலம் என்ன என்பதை ஸ்ருதிஹாசனிடம் கூற ஆரம்பிக்கிறார் மைம் கோபி. இதுவே படத்தின் மீதிக் கதை.

மாஸ் ஆக்‌ஷன் கலந்த படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். இந்தியாவை ஒட்டி ஒரு நாட்டையே உருவாக்கி, அதற்கான சட்டதிட்டம் என்று கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒரு உலகத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

ஆக்‌ஷனில் அதகளம் செய்திருக்கிறார் பிரபாஸ். ரொம்ப ரொம்ப பில்-டப் காட்சிகள் படத்திற்கு ஆங்காங்கே சரிவை ஏற்படுத்தி விடுகிறது. ஆனாலும், ரசிகர்களுக்கு அது நிச்சமயமாக விருந்தாக தான் இருக்கும்.

பிருத்விராஜும் ஈடு கொடுத்து ஆக்‌ஷனில் புகுந்து விளையாடுகிறார். கே ஜி எஃப் முதல் படத்தில் ஏகத்திற்கும் வில்லன்கள் வருவது போல், இப்படத்திலும் ஏகத்திற்கும் வில்லன்கள் வருகின்றனர். அனைவரையும் மண்டைக்குள் ஏற்ற சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.

சலார் – ஆக்‌ஷன் களம்.. –  3.5/5

Related post