வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விஜய் விஷ்வா
வணக்கம் தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து வருகிறது. மின்சாரம், குடிநீர், உணவு உட்பட எந்த அடிப்படை வசதியும் இன்றி மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி சேர்ந்த நண்பர் கணேசன் மற்றும் சுவர்ணலதா அவர்களது வேண்டுதலின்படி, நமது நிவாரண பொருட்கள் டூத் பேஸ்ட், பிரஸ் உடல் வலி மாத்திரைகள், ஓஆர்எஸ் குளுக்கோஸ், கோதுமை மாவு, பிஸ்கட், ஷாம்பு, நாப்கின்ஸ், போன்ற பொருட்கள் தூத்துக்குடி சேர்ந்த மீனவர் படகோட்டி சலார்க்கின் அவர்களது துணையுடன், விநியோகம் செய்யப்பட்டது. தனசேகரன் நகர் முத்தம்மாள் காலனி ஆதிபராசக்தி நகர் ராஜிவ் நகர் போன்ற தெருக்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்னும் அடிப்படை வசதி இன்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நம்மால் இயன்ற பொருட்களை வழங்கிய போது, மிகுந்த நன்றியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டனர்.
பல இடங்களில் இன்னும் மின்சாரமும் குடிநீரும் வராத நிலையில், மக்கள் மிகுந்த அவதியற்றி வருகின்றனர். எங்களது பயணத்தில் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்பும் போது, உடல் நலம் சரியில்லாத குழந்தை, வயதான மூதாட்டி உட்பட பலரை மீட்டுக் கொண்டு வந்தோம். அப்போது அவர்கள் ‘இங்கிருந்து வெளியே வந்தாலும் திரும்ப செல்ல முடியாத நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம், பாம்பு பூச்சி அட்டை, எல்லாவற்றுடன், எங்கு பள்ளம் எங்கு மேல் என்று தெரியாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர். நம்மால் இயன்ற உதவிகளை உணவு மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வழங்கியதோடு முடிந்த அளவு ஆட்களை மீட்டு வெளியில் கொண்டு வந்து விட்டோம், இப்பணியில் என்னுடன் ஒத்துழைத்த நண்பர் கணேசன் சொர்ணலதா மற்றும் சள்ளார் அவர்களுக்கு நன்றி அன்புடன் விஜய் விஷ்வா