சத்திய சோதனை விமர்சனம்

 சத்திய சோதனை விமர்சனம்

ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தினை இயக்கிய சுரேஷ் சங்கையா என்பவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “சத்திய சோதனை”. பிரேம்ஜி அமரன், ஸ்யம் சிதா, ரேஷ்மா, சித்தன் மோகன், செல்வ முருகன், ஹரிதா, பாரதி, ராஜேந்திரன், ஞானசம்பந்தம், முத்துபாண்டி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கதைப்படி,

அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷன் சரகத்திற்கு உள்ளே ஒரு கொலை நடக்கிறது.. அப்போது அந்த வழியாக வந்த பிரேம்ஜி, கொலை செய்யப்பட்டவரின் கழுத்தில் இருந்த நகை மற்றும் செல்போனை போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்து கொடுக்கிறார்.

சந்தேகப்பட்டு, பிரேம்ஜியை போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்துவிடுகின்றனர் போலீஸார். கொலை செய்தவர்களும் போலீஸில் சரணடைந்து விடுகின்றனர்.

கொலை செய்யப்பட்டவரின் கழுத்தில் கிடந்த அனைத்து நகைகளையும் கொள்ளையடித்தது யார் என்று விசாரணை நடக்கிறது. இறுதியாக அது யார் என்று போலீஸார் கண்டுபிடித்தனரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக பிரேம் ஜி இந்த படத்தில் நடித்ததை தாண்டி, கதைக்கேற்ற கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அப்படியொரு நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் பிரேம் ஜி. நாயகனாக ஜொலித்த பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்.

படத்தின் பெரிய பில்லராக வந்தவர்கள் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் தான்… இருவருக்கும் இடையில் இருக்கும் டைமிங்க் காமெடி படத்திற்கு நன்றாக கைகொடுத்திருக்கிறது.

ஒரு கிராமத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் என்ன மாதிரி நடக்கும், அந்த ஸ்டேஷனில் இருப்பவர்களின் மனநிலை, வாழ்வியல் என்ன மாதிரியாக இருக்கும் என்பதை நன்றாகவே தெரிந்து படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சங்கையா.

ஒரு அழகான கிராம வாழ்வியலை, ஒரு ஓட்டத்தை கண்முன்னே கொடுத்து நம்மை கிராமத்தில் வாழ வைத்திருக்கிறார். லட்சுமி பாட்டியின் யதார்த்தம், நம்மை ரசிக்க வைக்கிறது.

பிரேம்ஜியின் காதலியாக ஸ்வயம் சித்தா ஒரு சில காட்சிகள் வந்தாலும், காட்சிகளுக்கு அழகூட்டியிருக்கிறார்..

பெரிதான கதை இல்லை என்றாலும், ஒரு அழகான ஓட்டத்தை, வாழ்வியலை கொண்டு வந்து நம்மை ரசிக்க வைத்ததில் சத்திய சோதனை நம்மை சத்தமில்லாமல் ரசிக்க வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

சத்திய சோதனை – ரசிக்கக் கூடிய யதார்த்த கிராம வாழ்வியல் ….. –  3.25/5

Related post