சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

 சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

இயக்கம்: கோகுல்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம் 3.25/5

நடிகர்கள்: ஆர் ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி, சத்யராஜ், லால், தலைவாசல் விஜய், ஜான் விஜய்.

ஒளிப்பதிவு: சுகுமார்

இசை: விவேக் – மெர்வின்

கதைப்படி,

சிறு வயதில் தனது கிராமத்தில் சலூன் கடை வைத்திருக்கும் லால் மீது ஒரு அன்பு உண்டு ஆர் ஜே பாலாஜிக்கு. அவர் தன் தொழில் மீது வைத்திருக்கும் பக்தியைக் கண்டு வியக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

பெரியவன் ஆனதும் தானும் ஒரு சலூன் கடை வைப்பேன் என்று உறுதி கொண்டு, கல்லூரி படிப்பை முடிக்கிறார்.

காதல் தோல்வியடைய, வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை மணக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

மிக பிரமாண்டமான சலூன் கடை ஒன்றை திறக்க திட்டமிடுகிறார் ஆர் ஜே பாலாஜி. சில கோடிகளை தனது மாமனார் சத்யராஜிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார் ஆர் ஜே பாலாஜி.

அதே சமயத்தில், அங்கு ஏற்கனவே சலூன் கடையில் வேறுன்றி நிற்கும் ஜான் விஜய்யின் தொழில் பாதிக்கும் என்பதற்காக அவர் தடையாக வருகிறார்.

அதன்பிறகு இயற்கையும் பெரிய தடையாக வந்து நிற்க…. ஆர் ஜே பாலாஜியின் வாழ்க்கை அதன்பிறகு என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். ஆர் ஜே பாலாஜி தான் ஹீரோ என்றாலும், அவர் மீது பயணப்படும் கதை என்பது குறைவு தான். மற்ற நடிகர்கள் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

அதிலும், குறிப்பாக சத்யராஜின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம். இதுவரை நடித்த படங்களில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக ஜாலியாக செய்து முடித்திருக்கிறார்.

ஆர் ஜே பாலாஜி மற்றும் கிஷன் தாஸ் இருவரும் நண்பர்கள். இவர்களின் சிறு வயது கேரக்டர்களில் நடித்த சிறுவர்கள் படத்தின் கதாபாத்திரத்தோடு ஒன்றி நம்மை அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

கலகலவென செல்கிறது முதல் பாதி, அதன்பிறகு இரண்டாம் பாதி மிகப்பெரும் சோதனை தான். கருத்து சொல்கிறேன், செண்டிமெண்ட் வைக்கிறேன் என்று  இரண்டாம் பாதியில் சோர்வடைய வைத்திருக்கிறார் இயக்குனர்.

இரண்டாம் பாதியில் ஒரு கயிற்றை பிடித்து பயணமாகியிருக்கலாம்… அதை விடுத்து அனைத்தையும் கையில் எடுத்து ஒரு சுவாரஸ்யத்தை பெரிதாகவே இழந்திருக்கிறது இந்த சிங்கப்பூர் சலூன்…

விவேக் மெர்வின் இசையில் ஒரு பாடல் ரகம்… பின்னணி இசை கதையோடு பயணம் ஆகியிருக்கிறது.

ஒளிப்பதிவு நச்.. இருந்தாலும், சிஜி பணிகளில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம்.

மொத்தத்தில் முதல் பாதியை பார்ப்பதற்காகவாது நிச்சயம் சலூனிற்கு ஒருமுறை பயணப்படலாம்..

Related post