ப்ளூ ஸ்டார் விமர்சனம்

 ப்ளூ ஸ்டார் விமர்சனம்

இயக்கம்: S.ஜெயக்குமார்

ஒளிப்பதிவு: தமிழ் அ அழகன்

இசை: கோவிந்த் வசந்தா

நடிகர்கள்: அசோக் செல்வன் , ஷாந்தனு பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, T.N அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி.

கதைப்படி,

அரக்கோணம் பகுதியில் கதை நகர்கிறது. அருகருகே இருக்கும் இரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே மோதல் இருந்து வருகிறது. காரணம் கிரிக்கெட்.

இரு கிராம இளைஞர்களுக்கிடையே சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இனி அந்த இரு அணியும் மோதக் கூடாது என காவல்துறை கூறி விடுகிறது.

ஆனால், இரு அணியினருக்கும் இருக்கும் பகை அப்படியே இருந்து வருகிறது. ப்ளூஸ்டார் என்ற அணியின் கேப்டனாக அசோக் செல்வனும் ஆல்பா என்ற அணியின் கேப்டனாக ஷாந்தணுவும் இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் இரு கிராமத்தினரும் பேசி, திருவிழாவில் இரு அணிக்கும் கிரிக்கெட் நடத்த முடிவெடுக்கிறார்கள். பலம் வாய்ந்த ப்ளூ ஸ்டார் டீமை தோற்கடிக்க சாந்தணு லீக் போட்டியில் ஆடும் ஆட்டக்காரர்களான க்ளப் வீரர்களை ஆல்பா அணியில் சேர்த்து ஆட வைக்கிறார்.

அந்த போட்டியில் ஆல்பா அணி வெற்றி பெறுகிறது. அதன்பிறகு, க்ளப் வீரர்களால் சாந்தணு அவமானப்படுத்தப்படுகிறார். சாந்தணுவிற்காக க்ளப் வீரர்களை அடிக்கிறார் அசோக் செல்வன்.

அதன்பிறகு, இரு அணி வீரர்களும் இணைந்து க்ளப் நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு க்ளப் வீரர்களை எப்படி தோற்கடித்தார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

கிரிக்கெட் விளையாட்டில் சேர்வதென்றால் என்ன மாதிரியான ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார்.

அசோக் செல்வன், சாந்தணு, பிரித்வி மூவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். அசோக் செல்வனின் காதல் கவிதையாகவும் ஏணியாகவும் இருந்தது படத்திற்கு சற்று பலம் தான்.

சாந்தணுவின் கதாபாத்திரம் வலுவானது. தனது நிலைப்பாட்டை மாற்றி அதில் நேரெடுத்து பயணித்தது பலம்.

கொஞ்சலான காதலை செய்த கீர்த்தி பாண்டியன் அழகு. ப்ரித்வியின் ஜோடியாக வரும் திவ்யா துரைசாமி, சிரிப்பால் அனைவரையும் கவர்கிறார்.

பக்ஸ் கதாபாத்திரம் தான் படத்தின் பில்லர். வசனங்கள் கதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆனால், ஆங்காங்கே இருக்கும் சாதிக் குறியீடுகள் நன்றாகவே தவிர்த்திருந்திருக்கலாம்…(அம்பேத்கர் சாதியத் தலைவர் இல்லை)

கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் அவன் தான் வரணும் இவன் தான் வரணும் என்றில்லாமல், திறமை இருப்பவர்கள் யாராக இருந்தாலும் வரலாம் என்பதை வலுவாகவே சொன்ன இயக்குனர் ஜெயக்குமாரை பெரிதாகவே பாராட்டலாம்.

பாபு என்ற கிரிக்கெட் வீரரின் வசனங்கள் சிரிக்க வைத்தாலும், அதில் இருக்கும் அரசியல் பலரையும் சிந்திக்க வைத்து கைதட்டல் பெற்றது.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன நிலையில், வேகமெடுத்த திரைக்கதைக்கு துணையாக பின்னணி இசை பயணித்தது ரசிக்க வைத்தது.

படம் முழுக்க ஒரு விதமான மஞ்சள் கலர் டோனை கொடுத்திருந்து படத்தினை மண்வாசனையோடு ரசிக்க வைத்த ஒளிப்பதிவாளர் தமிழ் அ அழகன்.

மொத்தத்தில் ப்ளூ ஸ்டார் தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திரம் தான்.

ப்ளூ ஸ்டார் – 3.5 ஸ்டார் 5க்கு

Spread the love

Related post