விடுதலை வெற்றி; ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூரி!

 விடுதலை வெற்றி; ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூரி!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் விடுதலை. இதன் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

முக்கியமாக நடிகர் சூரியின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வெற்றியைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூரி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ அனைவருக்கும் வணக்கம். மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள், அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம்.’ என்று கூறியுள்ளார்.

soori, thanks letter, viduthalai

என்றும் அன்புடன்

சூரி

சிரம் தாழ்ந்த நன்றி

Related post