பைக் விபத்து; காலை இழந்தார் பிரபல நடிகர்!

 பைக் விபத்து; காலை இழந்தார் பிரபல நடிகர்!

பிரபல கன்னட தயாரிப்பாளர் எஸ் ஏ ஸ்ரீனிவாஸின் மகனான நடிகர் சூரஜ் கடந்த ஜூன் 24 ஆம் தேதி அன்று தனது பைக்கில் ஊட்டியில் இருந்து மைசூருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார் சூரஜ். அப்போது தனக்கு முன்னிருந்த ஒரு டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்த சூரஜ் எதிரில் வந்த டிப்பர் லாரியில் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்திற்குள்ளானார். மைசூரில் இருக்கும் மனிபால் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப் பட்டார் சூரஜ்.

சூரஜின் வலது கால் டிப்பர் லாரியின் அடியில் சிக்கி முழுவதுமாக சிதைந்துவிட்டதாகவும் அவர் மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் காவல் அதிகாரி ஒருவர்.

பலத்த அடி ஏற்பட்டதால சூரஜின் வலது காலை முழங்காலுக்கு கீழ் நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள் மருத்துவர்கள். அவருக்கு நேர்ந்த இழப்பிற்காக கன்னடத் திரையுலகப் பிரபலங்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

கன்னடத்தில் தற்போது வளர்ந்து ஹீராவாக இருக்கும் சூரஜ், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து ரதம் என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார் சூரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post