விஜய் படத்துக்குன்னா மட்டும் எங்க இருந்து வர்ராங்கன்னு தெரியல – விஜய் வசந்த்!

 விஜய் படத்துக்குன்னா மட்டும் எங்க இருந்து வர்ராங்கன்னு தெரியல – விஜய் வசந்த்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க, உருவாகி வருகிறது “லியோ” திரைப்படம்.

சில தினங்களுக்கு முன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, லியோ படக்குழுவினர் படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டனர்.

“நா ரெடி” எனத் துவங்கும் பாடலானது, பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து வருகிறது.

இந்நிலையில், அந்த பாடலில் சிகரெட், சரக்கு, போதை பொருட்கள் பற்றி பேசியிருப்பதால், இந்த பாடல் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பலரும் விஜய்யை விமர்சித்து வரும் நிலையில்,

நடிகரும் எம்.பி.யுமான விஜய் வசந்த், ”நடிகர் விஜய் படம் மட்டும் ஏன் இப்படி சர்ச்சையாகின்றன என தெரியவில்லை. புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை நான் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் கதைக் களத்தையும் பார்க்க வேண்டும். இது விழிப்புணர்வு படமாக கூட இருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.

 

Spread the love

Related post