இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கவிருப்பதாக முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அநேக படங்களில் நடிக்க ஒத்துக் கொண்ட காரணத்தினாலும், அதிகப்படியான நாட்கள் கொடுக்க முடியாத காரணத்தினாலும் தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.Read More
Tags : dulquer salman
நடிகர் கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கப்பட இருக்கிறது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார் மணிரத்னம். இப்படத்தில், மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமானே இசையமைக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. Read More