அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய்; AK 62 படப்பிடிப்பு எப்போது?

 அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய்; AK 62 படப்பிடிப்பு எப்போது?

AK 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில். தற்போது, மகிழ் திருமேனி தான் AK 62 படத்தின் இயக்குனர் என்று பல செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை AK 62 படத்தின் அப்டேட் அதிகாரபூர்வமாக வெளிவராத நிலையில். கூடுதலாக சிலதகவல்கள் கிடைத்துள்ளது.

‘தடம்’, ‘மீகாமன்’, ‘கலகத்தலைவன்’ போன்ற ஹிட் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.

இந்நிலையில், AK 62 படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி, AK 62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2015-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், AK 62 படத்தின் பூஜை இரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலுள்ள அஜித்தின் அலுவலகத்தில் நடந்துள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.

Related post