LEO படத்தில் இணைகிறாரா “லெஜெண்ட்” சரவணன்?

 LEO படத்தில் இணைகிறாரா “லெஜெண்ட்” சரவணன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். மேலும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரித்து வருகிறார்.

இப்போது லியோ படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீரில் மையம் கொண்டுள்ளது. அங்கு த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. எப்போதுமே லோகேஷ் தனது படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணம் ஏதாவது ட்விஸ்ட் வைத்திருப்பார்.

அந்த வகையில் லியோ படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறாராம். அதாவது கடந்த ஆண்டு மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய விஷயம் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் நடித்த தி லெஜன்ட் படம் தான். எப்படியோ ரசிகர்கள் மத்தியில் இவர் நன்கு பிரபலம் ஆகிவிட்டார்.

இப்போது அண்ணாச்சி தன்னுடைய அடுத்த பட வேலைகளில் பிஸியாக உள்ளாராம். அதாவது மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், லியோ படத்தில் சில காட்சிகளில் அண்ணாச்சி நடிக்க உள்ளாராம். அதற்காக இப்போது காஷ்மீர் சென்றுள்ளார்.

அங்கு பிரம்மாண்ட ஹோட்டலில் தங்கியிருக்கும் அண்ணாச்சி வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் லியோ படத்தில் அண்ணாச்சி இணைந்திருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. சாதாரண கல்லாக இருந்தாலும் அதை சிற்பமாக மாற்றக்கூடியவர் லோகேஷ்.

அப்படி இருக்கையில் அண்ணாச்சியை வைத்து கண்டிப்பாக ஏதாவது சம்பவம் செய்திருப்பார். மேலும் தி லெஜன்ட் படம் வெளியான போது விஜய், அஜித்துக்கு போட்டியாக தான் வருவேன் என்று கூறிய அண்ணாச்சி இப்போது விஜய் படத்தில் நடிப்பது ஆச்சரியமான விஷயம்.

மேலும், LEO படக்குழு காஷ்மீர் சென்ற சில தினங்களில் “இன்ஸ்டாகிராம்” புகழ் அமலா ஷாஜியும் காஷ்மீரில் இருக்கும் புகை படத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது, அமலா ஷாஜியும் LEO படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி காட்டு தீயாய் பரவியது குறிப்பிட தக்கது.

Related post