மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ !

 மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ !

பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் கபீர்லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மராட்டி திரைப்படம் “அதுர்ஷ்யா”. ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரு வெற்றிபெற்றிருக்கும் இப்படம் IMDB தளத்தில் 9.5 ஸ்டார் ரேட்டிங் உலக அளவில் சாதனை படைத்துள்ளது. தற்போது இயக்குநர் கபீர் லால் தமிழில் ஒரு திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

Lovely World Entertainment தயாரிப்பில், தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு “உன் பார்வையில்” என தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கபீர்லால் இயக்கியுள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

கண் பார்வையற்ற நாயகி, திடீரென கொல்லப்பட்ட தன் தங்கையின் மரணத்திற்கு யார் காரணம் என தேட ஆரம்பிக்கிறாள். அவளின் தேடலும், அதை தொடர்ந்து நடக்கும் மர்மமான சம்பவங்களும் தான் கதை.

ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் விறுவிறுப்பான திரைக்கதையில் அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ் நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நாயகி பார்வதி நாயரின் கணவராக சைக்காலஜி மருத்துவராக முக்கியமானதொரு பாத்திரத்தில் நடிக்கிறார்.நிழல்கள் ரவி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர் அஜய் குமார் சிங் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் அஜய் குமார் சிங் Lovely World Entertainment சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். பாலிவுட் முதல் இந்தியாவின் பல மொழிகளில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கபீர் லால் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். மேலும் தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவு – ஷாஹித் லால், ஒலி வடிவமைப்பு – கபீர் லால், படத்தொகுப்பு – சதிஷ் சூர்யா, இசை – அச்சு ரஜாமணி, வசனம் – V பிரபாகர் கலை – விஜய் குமார், பப்ளிசிடி டிசைன்ஸ் – NXTGEN STUDIOS ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Related post