Thanni Vandi Movie Review

 Thanni Vandi Movie Review
Digiqole ad

ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி சரவணா தயாரித்து தண்ணி வண்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாணிக்க வித்யா.
இதில் உமாபதி ராமையா, சம்ஸ்க்ரிதி, தம்பி ராமையா, பால சரவணன், வினுதாலால், வித்யூலேகா, தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுரைமுத்து, முல்லை கோதண்டம், ஆடுகளம் நரேன், சரண்ராஜ், மனோஜ்குமார், பாவா லட்சுமணன், காதல் சுகுமார், பிச்சைக்காரன் மூர்த்தி, திண்டுக்கல் அலேக்ஸ், மதுரை தமிழ், அப்சல், குணா கந்தசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – எஸ்.என்.வெங்கட், எடிட்டர்-ஏ.எல்.ரமேஷ், கலை இயக்குனர்-வீரசமர், இசை-மோசஸ், பின்னணி இசை-எஸ்என்.அருணகிரி, நடனம்-தினேஷ், தீனா, பாடல்கள்-மோகன் ராஜன், கவிஞர் சாரதி, கதிர்மொழி, மாணிக்க வைத்யா, கவிஞர் வி.மதன்குமார், சண்டை-சூப்ரீம் சுந்தர், தயாரிப்பு நிர்வாகம்-ஏ.வி.பழனிசாமி, ஒப்பனை-மூவேந்தர், உடை-புட்சி, பிஆர்ஒ-மௌனம் ரவி, மணவை புவன்.

சதாசிவத்தின் மகனான மதுரையில் வண்டியில் தண்ணீர் சப்ளை செய்யும் சுந்திர மகாலிங்கம் தாமினியை காதலிக்கிறார்.அனாதையான தாமினி தன் சொந்த முயற்சியில் பவர் லாண்டரி நடத்துகிறார். தாமினியின் சகோதரி லாவன்யாவிற்கும் சஞ்சய்க்கும் திருமணம் நிச்சயக்கப்படுகிறது. அதே சமயம் அந்தப் பகுதியில் ஆர்டிஓ -வாக இருக்கும் பிரேமா சங்கரன் கண்டிப்பான அதிகாரி. எங்கே தப்பு நடந்தாலும் எதிரித்து துணிந்து செயல்படும் வல்லமைபெற்றவர் என்பதால் ஊர் மக்கள் அவரை மரியாதையுடன், பெண்கள் அவரைப் போல் முன்மாதிரியாக திகழவேண்டும் என்று எண்ணுகிறார்கள். தாமினியும் பிரேமா சங்கரனை போல் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் போது லாவன்யாவிற்கு திருமணம் நிச்சயித்த சஞ்சய்யும் பிரேமா சங்கரனும் தகாத உறவு வைத்திருப்பதை பார்க்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியாகும் தாமினி, லாவன்யாவை அழைத்துக்கொண்டு நியாயம் கேட்க செல்கிறார். அங்கே பிரேமா சங்கரனின்   நடத்தையை பற்றி கேள்வி எழுப்ப, இருவரையும் எச்சரிக்கும் பிரேமா சங்கரன் அவர்களை மிரட்டி அனுப்பிவிடுகிறார். அதன் பின் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று எண்ணி பிரமோ சங்கரன் தாமினியை கொல்ல சதித்திட்டம் போடுகிறார். தாமினி பிரேமா சங்கரனிடமிருந்து தப்பித்தாரா? சுந்தர மகாலிங்கம் தாமினியை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

இளமை துள்ளலுடன், சண்டை, காதல் காட்சிகள் என்று மிக யதார்த்தமாக நடித்துள்ளார் உமாபதி ராமையா. நாயகி சம்ஸ்க்ரிதி உமாபதி ராமையாவின் காதலியாக வந்து மனிதில் நிற்கும் அளவிற்கு நடித்துள்ளார்.
வில்லன் இல்லாத கதைக்களத்தில் வில்லியாக வினுதாலால் யாருமே நினைத்து பார்த்திராத துணிச்சலாக நடிக்க துணிந்த செக்ஸ் போதை கொண்ட பெண்ணாக மறைமுக வாழ்க்கை, வெளியுலகத்திற்கு துணிச்சல் மிகுந்த அதிகாரியாக ஏற்றிருக்கும் மறுமுகம் கொண்ட கதாபாத்திரம் வித்தியாசமானது. அதற்கேற்ற மேனரிசம், உடல்மொழியால் வேறுபடுத்தி அசால்டாக நடித்திருக்கிறார்.

தந்தை கதாபாத்திரத்தில் தம்பி ராமையா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.

நண்பனாக வரும் பாலசரவணன், சகோதரியாக வித்யூலேகா, தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுரைமுத்து, முல்லை கோதண்டம், ஆடுகளம் நரேன், சரண்ராஜ், மனோஜ்குமார், பாவா லட்சுமணன், காதல் சுகுமார், பிச்சைக்காரன் ழூர்த்தி, திண்டுக்கல் அ;லேக்ஸ், மதுரை தமிழ், அப்சல், குணா கந்தசாமி கதாபாத்திரங்கள் படத்திற்கு எனர்ஜி சேர்க்கிறார்கள்.

மோசஸ்pன் இசையும், எஸ்.என். அருணகிரியின் பின்னணி இசையும் மோகன் ராஜன், கவிஞர் சாரதி, கதிர்மொழி, மாணிக்க வைத்யா, கவிஞர் வி.மதன்குமார் பாடல்கள் அனைத்தும் அருமை.எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவும், ஏ.எல்.ரமேஷ் எடிட்டிங்கும் கச்சிதம்.

வீரசமர் கலை மற்றும் தீனா மற்றும் தினேஷ் மாஸ்டர்ஸ்; நடன இயக்கமும் சிறப்பாக உள்ளது.

இதுவரை ஆண்களையே செக்ஸ் போதைப் பொருளாக வில்லன்களாக காட்டி சித்தரித்திருக்கும் சூழலில், ஒரு பெண்ணை செக்ஸிற்கு அடிமையாக காட்டி அதனால் அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாவதும் அதிகாரத்தை வைத்து எப்படியெல்லாம் மோசமாக நடந்து கொள்கிறார் என்பதை சிம்பிளான கதைகளத்தில் தண்ணி வண்டி என  டைட்டிலோடு வித்தியாசமாக எழுதி இயக்கியிருக்கிறார் மாணிக்க வித்யா.

Digiqole ad
Spread the love

Related post