ஒப்பந்தமானது “தீரன் அதிகாரம் ஒன்று பாகம் 2”

 ஒப்பந்தமானது “தீரன் அதிகாரம் ஒன்று பாகம் 2”

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவாகி வெளிவந்து மிகப்பெரும் வெற்றி கண்ட படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று.

அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என அனைவரிடத்திலும் கேட்கப்பட்டது.

தற்போதுஅதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

கமல்ஹாசனின் 233வது படத்தை ஹச் வினோத் இயக்கவிருந்த நிலையில், 234வது படத்தை முடித்த பிறகு தான் கமல் 233வது படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

அதனால், வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தெரிகிறது.

Related post