பாதயாத்திரையாக திருப்பதி மலை ஏறிய தீபிகா படுகோன்
பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது ஃபைட்டர்.
இதில் ஹீரோவாக கிருத்திக் ரோஷன் நடித்திருக்கிறார். போர் விமான பைலட்டின் கதையாக உருவாகியுள்ள இப்படம், மிகப்பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இப்படம், வெற்றி பெற வேண்டி நடிகை தீபிகா படுகோன், திருப்பதி அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக நடந்தே கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.