இணையத்தில் வைரலாகும் அஜித்குமார் எடுத்த புகைப்படங்கள்!
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் தான் விடாமுயற்சி. வெளிநாட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மிகப்பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. புகைப்படம் எடுப்பதில் எப்போதும் ஆர்வம் கொண்டவர் தான் அஜித்குமார்.
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகை ரெஜினா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், நடிகர் அர்ஜூன் உள்ளிட்டவர்களை அஜித்குமார் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
ajithkumar, vida muyarchi, photos