யூட்யூபில் வண்ணமையிலே என்னும் தனிப்பாடல் வெளியாகியுள்ளது

 யூட்யூபில் வண்ணமையிலே என்னும் தனிப்பாடல் வெளியாகியுள்ளது

இந்த பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும் ,ஒரு குழந்தையின் ஒரு வருட கல்வி கட்டணத்தை பாடலின் குழு தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தது.

இந்த தொண்டிருக்கு‌ பல கல்லூரிகளில் உள்ள ரோட்ராக்ட் குழுவும் உதவி செய்துவருகிறது, இந்த தொண்டின் முதற்கட்டமாக நேற்று சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற நிகழ்வில் பாடலின் குழுவினர் சரோஜினி வரதப்பண் மகளிர் மேல்நிலை பள்ளியில ஏழாம் வகுப்பு பயிலும் ஸ்ரீ. அ.தன்யஸ்ரீ என்னும் மாணவிக்கு ரூபாய் 20,000 முதற்கட்டமாக வழங்கினர். இதன் தொடர்ச்சியாக பாடல் ஒவ்வொரு 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கும் தருணத்திலும் ஒரு குழந்தையின் கல்விக்கட்டணத்தை குழுவினர் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். இதனை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

குழுவினர் விவரம்:

பாடல்: வண்ணமயிலே
இசை: ஏகே பிரியன்
நடிகர்கள்: அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன், தேஜு அஷ்வினி
தயாரிப்பு: நாய்ஸ் & கிரைன்ஸ் சார்பாக கார்த்திக் ஶ்ரீநிவாஸ் & மகாவீர் அசோக்
பாடகர்கள்: ஏகே பிரியன், அக்ஷயா சிவக்குமார்
பாடல் வரிகள்: மு.வி.
இயக்கம் & நடனம்: அபு மற்றும் சால்ஸ்

Related post