வசந்த முல்லை விமர்சனம்

 வசந்த முல்லை விமர்சனம்

பாபி சிம்ஹா, கஷ்மீரா பர்தேசி, ஆர்யா, சரத் பாபு மற்றும் சிலர் நடித்துள்ள படம் “வசந்த முல்லை”. ரமணன் புருஷோத்தமா இப்படத்தை இயக்கியுள்ளார்.

எதை பேசுகிறது இப்படம்?

ஒரு மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம். தூக்கம் இல்லை என்றால், என்னென்ன பிரெச்சனைகள் நிகழும் என்பதை த்ரில்லர் பாணியில் இப்படம் பேசியுள்ளது.

கதைப்படி,

பெரிய ஐ.டி. நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை பார்க்கிறார் பாபி சிம்ஹா. கடும் வேலை வலு காரணமாகவும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தாலும். நான்கு மாத காலம் தூங்காமல் வேலை பார்க்கிறார் பாபி. ஒரு கட்டத்திற்கு பின், அவரை அறியாமலே அவர் தூங்க ஆரம்பிக்கிறார். அதை “ப்ளாக் அவுட்” என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படி இருக்க, வேலை ஏதும் பார்க்காமல் சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் வலியுறுத்த. தனது மனைவி கஷ்மீராவுடன் வெளியூர் செல்கிறார் பாபி.

அங்கு இவர்கள் செல்லும் வழியில் கார் ஓட்டும் கஷ்மீரா ஏதோ மீது காரை மோதிவிட, அருகிலுள்ள விடுதியில் தங்கலாம் என முடிவெடுக்கின்றனர். அப்போது, விடுதியில் திடீரென, கஷ்மீராவுக்கு மூச்சு திணறல் ஏற்பட, மாருடந்த்து வாங்க அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு செல்கிரார் பாபி.

அவர் திரும்பி வந்து பார்த்தால் இவர்கள் தங்கியிருந்த இடத்தில் கஷ்மீரா இல்லை. மேலும், இவர்கள் விடுதி எடுத்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. பாபி சிம்ஹா குழப்பத்தில் இருக்கும் அதே சமயம், யாரோ முகம் தெரியாத நபர் அம்பு எய்து பாபியை கொலை செய்ய முற்படுகிறார்.

அந்த சண்டையில், கஷ்மீராவை கண்டு பிடிக்கிறார் பாபி. அப்போது, எதிர்பாராத விதமாக கஷ்மீரா இறந்து போகிறார்.

அதன் பின், விடுதி உரிமையாளர் ஜன்னல் வழியில் ஏதோ கார் வருகிறதே என்று பார்த்தால் அந்த காரில் பாபி சிம்ஹாவும், கஷ்மீராவும் வந்து இறங்குகிறார்கள். அங்கு ஆரம்பிக்கிறது இந்த லூப்….

கொலையாளி யார்? எதனால் இந்த லூப் வருகிறது? லூப்பில் இருந்து பாபி சிம்ஹா தப்பித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை…

பாபி சிம்ஹாவின் நடிப்பு கச்சிதம். கோபப்படும் காட்சி, தூக்கமில்லாமல் தவிக்கும் காட்சி என அவரின் பாத்திரத்தை நமக்கு உணர்த்தினார் சிம்ஹா. மேலும், உடம்பை சற்று மெருகேற்றி செம மிரட்டலாகவும் காட்சியளித்தார் பாபி.

கஷ்மீராவுக்கு அதிகப்படியான ஸ்க்ரீன் ஸ்பேஸ் இப்படத்தில் இருக்கிறது. அதை அவர் உபயோகப்படுத்தினாரா என்று கேட்டல். ஆம், அவருக்கு கொடுத்த வேலையை செய்து நம் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கஷ்மீரா.

மற்றபடி, நடிப்பை பற்றி சொல்லும் அளவிற்கு படத்தில் பெரிதாக கதாபாத்திரங்கள் இடம் பெறவில்லை. அந்த அளவிற்கு சரியான திட்டமிடலுடன் இயக்கியிருக்கிறார் ரமணன். சிம்பிளான மெஸேஜ், அதை த்ரில்லிங்காக சொல்ல வேண்டும் என்று நினைத்ததற்கே அவருக்கு தனி பாராட்டுக்கள். இருந்தாலும், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நம் எதிர்பார்ப்பையும், படத்தின் த்ரில்லையும் பூர்த்தி செய்யும் விதத்தில் அமைத்திருந்தால் நமக்கு முழு திருப்தி கிடைத்திருக்கும்.

ராஜேஷ் முருகேசன் இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, மலைப் பிரதேசத்தின் அழகையும், பங்களாவின் பிரம்மாண்டத்தையும் சிறப்பாக காட்சி படுத்திருக்கிறார்.

வசந்த முல்லை – தூக்கத்தை தாண்டிய வேலை முக்கியமில்லை.

Related post