ஒரே நேரத்தில் நான்கு படங்கள்! விறுவிறுப்பான நடிப்பில் விஜய் விஷ்வா

 ஒரே நேரத்தில் நான்கு படங்கள்! விறுவிறுப்பான நடிப்பில் விஜய் விஷ்வா

சாயம், மாயநதி, பட்டதாரி  உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து முத்திரை பதித்தவர், நடிகர் விஜய் விஷ்வா.

தற்போது இவர் பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

லோகு இயக்கத்தில் சோபிலால்  தயாரிக்கும் ‘பரபரப்பு’ என்ற  படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் விஷ்வா  நடிக்கிறார்.அதே போல, விஜயன்  இயக்கத்தில்,தயாரிப்பு கே.வி.மீடியா செந்தில் தயாரிக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் காதல் சுகுமார்,  பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர்.கெவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் ‘கும்பாரி’ படத்திலும் விஜய் விஷ்வா நாயகனாக தோன்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடக்கிறது. 

மேலும், சந்தோஸ் இயக்கத்தில்  முருகா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக விஜய் விஷ்வா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் தொடர்ந்து 25 நாட்கள் இரவிலேயே எடுக்கப்பட்டது.
விறுவிப்பாக  பல படங்களில் நடித்து வருவது குறித்து அவர், “இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு வாய்ப்பு அளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கும், இறை சக்திக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்” என்றார்.

இந்நிலையில் மாயநதி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக எம்.ஜி.ஆர். சிவாஜி அகடமி, விஜய் விஷ்வாவுக்கு சிறந்த நடிகர் விருது அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related post

You cannot copy content of this page