யாத்திசை திரைவிமர்சனம்

 யாத்திசை திரைவிமர்சனம்

ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் நடிப்பில், தரணி இராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “யாத்திசை”.

எதை பேசுகிறது இப்படம்?

பொதுவாக பேரரசுக்கு-பேரரசுக்கு யுத்தம் நடந்து தான் இதுவரை படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்படமோ, ஒரு பேரரசை எதிர்த்து நிக்கும் ஒரு “குடி”யை சார்ந்த மக்கள் பற்றிய ஒரு கதையை பேசுகிறது. அந்தக் கதையில், தமிழன் எவ்வளவு வீரமானவன் என்பதை நமக்கு எடுத்துச் சொல்கிறது “யாத்திசை”.

கதைப்படி,

பாண்டிய மன்னரான ரணதீர பாண்டியனை(ஷக்தி மித்ரன்), கொதி(சேயோன்) என்ற எயின குலத்தலைவன் சில நூற்று வீரர்களை கொண்டு பாண்டிய மன்னனை எதிர்த்து போர் செய்ய முற்படுகிறார். அந்த யுத்தத்தை வென்றது யார்? நம் வரலாறு என்ன? ஒரு மன்னன் எதற்காக ஆட்சியை தக்க வைத்துள்ளார்? என்று பல கேள்விகளுக்கு பதில் தான் “யாத்திசை”.

முழுக்க முழுக்க அறிமுக நடிகர்களை மட்டுமே வைத்து, தைரியமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தரணி இராசேந்திரன். அவர் கையிலெடுத்த கதை, அதற்காக அவர் சேகரித்த தகவல்கள், அவரின் உழைப்பு என ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பு தெரிந்தது.

இளைஞனாக, வரலாற்றை பதிவு செய்ய வேண்டுமென அவரின் சிந்தனையே பாராட்டத்தக்கது. சங்க தமிழ் வார்த்தைகளை மட்டுமே பேசும் எயினர் கூட்டம். செந்தமிழை பேசும் பாண்டிய, சோழ மக்கள் என இரண்டையும் கலந்து, இருவருக்கும் உண்டான வேறுபாட்டை காட்டியுள்ளார் இயக்குனர் தரணி.

சோழ நாடு, பாண்டிய நாடு, எயினர் குடில் என அவர்கள் கீழே எழுத்துக்களை பயன்படுத்தி நமக்கு காட்டும் பொது, ஆங்கிலத்தை பயன்படுத்தாமல், சங்க தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியது, இயக்குனரும் படக்குழுவும் எந்த அளவிற்கு ஒரு படத்தை முழுமையாக்க நினைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

கொற்றவைக்கு பலி கொடுக்கும் காட்சியை முழுமையாக படமாக்கியுள்ளார் இயக்குனர். அந்த இடம் முழுக்க சங்கத்தமிழ் வருவதால் நம்மை சற்று சோர்வடைய செய்கிறது அந்த காட்சி. மற்ற படி, படத்தில் குறை என்று ஏதும் இல்லை.

கே.சக்ரவர்த்தியின் இசை விருது பெரும் அளவிலான ஒரு இசை, நம்மை 700 ஆம் நூற்றண்டிற்கே கொண்டு சேர்த்து விட்டது.

மேலும், சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிக யதார்த்தமாகவும் நம்பும் படியாகவும் அமைந்து, புதிய ஒரு தோற்றத்தை தந்துள்ளது.

மேலும், நடிகர்களான ஷக்தி மித்ரன் – ரணதீர பாண்டியன், சேயோன் – கொதி ( எயின தலைவன்), ராஜலட்சுமி – தேவரடியார், குரு சோமசுந்தரம் – எயின பூசாரி, சுபத்ரா – பெரும்பள்ளி தலைவி, சமர் – துடி (எயின போர் வீரன்), வைதேகி அமர்நாத் – தேவரடியார். அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்துள்ளனர்.

யாத்திசை – எத்திசையும் தமிழனின் வீரமே  – (3.25/5)

 

Related post