மீண்டும் போலீஸ் கதாபாத்திரம் வேண்டாம் என்றிருந்தேன். ஆனால்,,, – கதிர் & நரேன் பேச்சு;

 மீண்டும் போலீஸ் கதாபாத்திரம் வேண்டாம் என்றிருந்தேன். ஆனால்,,, – கதிர் & நரேன் பேச்சு;

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்யராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, “கயல்” ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”.

வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவினில் பேசிய பிரபலங்கள் கூறியதாவது,

நடிகை பவித்ரா லக்‌ஷ்மி, முதல் முறையாக ஒரு ஆடியோ லாஞ்ச். யூகி படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அறிமுகமான சீக்கிரத்தில் இருமொழி படத்தில் நடிப்பது மிகப்பெரிய கொடுப்பினை. இந்தப்படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இரு மொழியில் இப்படத்தை எடுத்தது புது அனுபவம், என்றார்.

நட்டி எனும் நட்ராஜ், பிரபு திலக் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் அவர் வெளியிடும் படங்களை பார்த்து பெருமையாக இருக்கும். ஜாக் மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார். நீங்கள் நினைப்பது போல் இந்தப்படம் இருக்காது உங்களை நிறைய ஆச்சர்யபடுத்தும். நன்றி.

நடிகை ஆத்மிகா, நீண்ட காலம் கழித்து தமிழில் வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் எடுத்தது மகிழ்ச்சி. மிக நல்ல திரைக்கதை இக்கதையில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான பாத்திரம் முதலில் செய்வது கடினமாக இருந்தது. சவாலாக முயன்று செய்துள்ளேன், என்றார்.

நடிகர் நரேன், கைதி படத்திற்கு பிறகு நிறைய போலீஸ் பாத்திர வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. இந்தக்கதையும் அந்த மாதிரி தான் என்பதால் இப்படத்தில் நடிக்க கூடாது என்று தான் முடிவு செய்தேன். ஆனால், கதையை இயக்குநர் சொன்ன விதம் அதில் இருந்த திருப்பங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ஓடிடியில் நிறைய ஆஃபர் வந்த போதும் இப்படத்தை நம்பி திரையரங்கிற்காக தயாரிப்பாளர்கள் கொண்டுவந்துள்ளார்கள்.

நடிகை கயல் ஆனந்தி, கயல் படம் வந்து 8 வருடம் ஆகிறது. யூகி படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இப்படம் பண்ணும் போது நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன். மிக மிக சுவாரஸ்யமான கதை, என்றார்.

நடிகர் கதிர், சுழல் படம் நடித்துக் கொண்டிருக்கும் போது இந்தக்கதை வந்தது. போலீஸ் கதாபாத்திரம் மீண்டும் பண்ணக்கூடாது என இருந்தேன் ஆனால் கதை மிகவும் பிடித்திருந்தது. நட்டி, ஆனந்தி, நரேன் என எல்லோரையும் திருப்தி செய்யக்கூடிய கதை. மிக சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்கும். பரியேறும் பெருமாளுக்கு பிறகு கயல் ஆனந்தியோடு நடிக்கிறேன். ஆனால் இந்தப்படம் மிக வித்தியாசமாக இருக்கும். பாக்யாராஜ் அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் குழந்தை மாதிரி பேசி வேலை வாங்கி விடுவார். என்றார்.

Spread the love

Related post

You cannot copy content of this page