1 Year of Thiruchitrambalam; இணையத்தில் கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!

 1 Year of Thiruchitrambalam; இணையத்தில் கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்!

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இப்படத்தில், தனுஷ், நித்யா மேனன், ராஷிகண்ணா, ப்ரியாபவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அனிருத் இசையில் ஊருவான இப்படம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது..

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது.

இப்படம் வெளியாகி, நேற்றோடு ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் அதனை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், படக்குழு தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்நிகழ்வை கொண்டாடியிருக்கின்றனர். இப்புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Related post