இளையராஜாவாக தனுஷ்.. டைரக்டர் இவர்தான்!

 இளையராஜாவாக தனுஷ்.. டைரக்டர் இவர்தான்!

இயக்குனரும் நடிகருமான தனுஷ் தற்போது குபேரா என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே தான் நடித்து இயக்கிய திரைப்படமான ராயன் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெலுங்கு பட இயக்குனரான சேகர் இயக்கத்தில் தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தினை கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறாராம்.

விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

 

Related post