கமல்ஹாசனுக்கு 150 கோடி சம்பளம்.!?

 கமல்ஹாசனுக்கு 150 கோடி சம்பளம்.!?

ஆக்டர் விஜய் தளபதி 68 படத்துக்கு 200 கோடி சம்பளம் வாங்கப் போறார் அப்படீங்கற சேதிதான் ரீசண்டா இந்திய திரையுலகையே ஆட்டி படைச்சுது. இந்நிலையில், அதை விட இன்னொரு வியப்பான தகவல் தற்போது வெளியாகி சினிமா இண்டஸ்ட்ரியையுமே ஸ்தம்பிக்க வைச்சுபுடுச்சு

விக்ரம் படம் ஹிட் கொடுத்ததையடுத்து அடுத்தடுத்த படங்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.

விக்ரம் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்ததால் மிகப்பெரும் வசூலை பார்த்துவிட்டார் கமல்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் டோலிவுட் படம் ஒன்றில் வெறும் 20 நாட்கள் கால்ஷீட்டிற்காக சுமார் 150 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஆனால் ஹீரோவாக இல்லை வில்லனாக.

நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரமாண்டமான படமான ”ப்ராஜெக்ட் கே” படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறாராம் கமல்ஹாசன்.

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் கமல் என்கிற தகவல் கசிந்துள்ளது. இந்த படத்திற்காக தான் கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசியிருக்கிறாராம்.

kamalhaasan, tollywood, villain salary

Related post