Jail Movie Review

 Jail Movie Review

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் GV பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.குடிசையில் வாழும் மக்கள் புலம்பெயர் அவல நிலையைமையமாக கொண்டு எடுத்துள்ளார்.வழக்கமாக வசந்த பாலன் இயக்கத்தில் இசை அமைக்கும் இந்த கூட்டணி முதல் முறையாக நடிப்பில் இறங்கியிருக்கிறார்கள். படத்தின் கதை , வட சென்னையில் தனது நெருங்கிய நண்பனுடன் சேர்ந்து போதை பொருள் மற்றும் பல திருட்டு என்று ஈடுபடுகிறார் நாயகன் gv பிரகாஷ். இதில் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ரவிமரியாவுகும் கமிஷன் செல்கிறது. ஒரு கட்டத்தில் சிறு வயதில் திருட்டில் ஈடுபட்டு சிறை செல்லும் பசங்க பாண்டி திரும்பி வருகிறார், திருந்தி வாழ நினைக்கும் அவர் தனது நெருங்கிய நண்பர்களாக ஜிவி பிரகாஷ் மீண்டும் இணைகிறார்.இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு கும்பலுக்கும் பகை முற்றுகிறது. இதை ஆதாயமாக பயன்படுத்தும் இன்ஸ்பெக்டர் ரவிமரியா போடும் திட்டங்களும் ,அதில் இருந்து ஜிவி பிரகாஷ் மற்றும் நண்பர்கள் தப்பினர்களா இல்லையா என்பதை படத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நாயகன் ஜிவி பிரகாஷ் நடிப்பில் எந்தவொரு குறையும் இல்லை என்றேநினைக்கிறேன், நாச்சியார் படத்திற்கு பிறகு இந்த படத்தில் வடசென்னை பையனாக பக்காவாக பொருந்துகிறார். நாயகி அபர்ணதி முதல் படத்தில் தெரிந்து புரிந்து நடித்து இருக்கிறார். காதல் காட்சிகள் மனதில் நிற்கவில்லை. நாயகன் அம்மாவாக ராதிகா கை தேர்ந்த நடிப்பு மிகவும் அருமை. மகனை நினைத்துப் அவர் படும் அவஸ்தைகள் பாடம். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு துணை நிற்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் வடசென்னை அழகை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். படத்தின் இயக்குனர் வசந்த பாலன் நல்ல கதையம்சம் கையில் எடுத்து அதை தவிர்த்து வேறொரு கதையை நகர்த்திச் செல்ல முயல்கிறார். ஆனால் அது கை கொடுக்கவில்லை.

Related post