காலேஜ் ரோடு விமர்சனம்

 காலேஜ் ரோடு விமர்சனம்

லிங்கேஷ், மோனிகா, ஆனந்த் நாக், பொம்மு லட்சுமி, அக்ஷய் கமல் நடிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கிய படம் “காலேஜ் ரோடு”.

கதைப்படி,

கதையின் நாயகன் லிங்கேஷ் ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறார், அப்போது இவர் ஒரு ப்ராஜெக்ட் செய்கிறார், ரிவர்ஸ் ஹாக்கிங் என்பதுதான் அந்த ப்ராஜெக்ட். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வங்கிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறது, இப்படி நடக்கும் ஒரு வங்கி கொள்ளையை கதையின் நாயகன் லிங்கேஷ் பார்த்துவிடுகிறார். இவரை சாட்சியாக வைத்து போலிஸ் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

இந்த வங்கி கொள்ளைகள் எதற்காக நடந்தது, யாருக்காக நடந்தது , என்பதே படத்தின் மீதி கதை…

நாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ் இதற்கு முன்னதாக “கபாலி” படத்தில் மிரட்டியிருப்பார். அப்படியான ஒரு நடிகர் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கவேண்டும் என்பதால் கிட்ட தட்ட 30 கிலோ இடை குறைத்து அசத்தியுள்ளார்.

உடன் நடித்த நண்பர்கள், கிராமத்து மக்கள் என அனைவரும் சிறப்பான நடிப்பையே கொடுத்துள்ளனர்.

படத்தின் முக்கிய காட்சி என்று பார்த்தல் ஒரு கிராமத்தில் நடக்கும் தற்கொலை காட்சி தான். அந்த காட்சியை மிகவும் உயிரோட்டமாக இயக்கியுள்ளார் இயக்குனர். அந்த காட்சிக்கு ஒளிப்பதிவு மிக முக்கிய பலம்.

பல இடங்களில் டப்பிங் சிங்க் இல்லை. அதை கவனித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மேலும், கதையையும் அதன் ஆழத்தையும் க்ளைமாக்ஸில் உணர செய்த இயக்குனர். திரைக்கதையை கூடுதல் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாமோ என்ற எண்ணம்.

காலேஜ் ரோடு – சிலர் மட்டுமே செல்ல அனுமதி.

Related post