மே 10 அன்று ரிலீஸாகும் சாந்தகுமாரின் “ரசவாதி”

 மே 10 அன்று ரிலீஸாகும் சாந்தகுமாரின் “ரசவாதி”

மெளனகுரு, மகாமுனி படங்களின் இயக்குனரான சாந்தகுமார் அடுத்ததாக ரசவாதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ரம்யா, ஜி எம் சுந்தர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

வரும் மே மாதம் 10 ஆம் தேதி இப்படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாந்தகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களுமே மக்களால் பெரிதும் பேசப்பட்ட நிலையில், ரசவாதி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது படக்குழு.

Related post