பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடும் “இந்தியன் 2” டீம்!

 பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடும் “இந்தியன் 2” டீம்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களாகவே உருவாகி வரும் படம் தான் “இந்தியன் 2”. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

படத்தின் பட்ஜெட்டும் பல மடங்கு எகிறிவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைகா கவலைப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

வரும் மே மாதம் இதன் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர். பல நட்சத்திரங்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post