விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை.. விளக்கம் கொடுத்த மேனேஜர்!

 விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை.. விளக்கம் கொடுத்த மேனேஜர்!

நேற்று மதிய வேளையில் நடிகர் விக்ரமிற்கு ஹாட் அட்டக் என்றும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவ ஆரம்பித்தது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாயினர். அதன் பின், நடிகர் விக்ரமின் மேனஜராக பணிபுரியும் சூர்யநாராயணன் விக்ரமின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்தார்.

அதில் நடிகர் விக்ரம் சார் நலமுடன் உள்ளார், அவருக்கு மாரடைப்பு இல்லை. யாரும் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது நலமாக இருக்கிறார். ஒரு நாளில் வீடு திரும்பி விடுவார். என்ற தகவலை அளித்துள்ளார். இதனால் அனைவரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page