சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தைக் கைப்பற்றிய உதயநிதி!
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு.
இப்படத்தை ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ஏற்கனவே வெளியான இரு பாடல்களும் ஹிட் அடித்துள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தின் தற்போது பெரிய வெளியீட்டு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இந்நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.