மார்ச் மாதத்திற்கு தள்ளிச் செல்லும் தங்கலான்

 மார்ச் மாதத்திற்கு தள்ளிச் செல்லும் தங்கலான்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் மாதத்திற்கு தள்ளிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருப்பதால், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

படம் மார்ச் மாதத்திற்கு தள்ளிச் செல்வதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

Related post