உணவு டெலிவரி பணியாளர்களுக்கு “அநீதி” பிரத்யேக காட்சி!

 உணவு டெலிவரி பணியாளர்களுக்கு “அநீதி” பிரத்யேக காட்சி!

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “அநீதி”.

படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், எடுத்துக் கொண்ட கதைக்காக பலரும் இயக்குனர் வசந்த பாலனை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு சிறப்பு பிரத்யேக காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார் இயக்குனர் வசந்த பாலன்.

படம் முடிந்ததும் படக்குழுவினரை பணியாளர்கள் வெகுவாக பாராட்டியிருக்கின்றனர்.

இதுகுறித்து இயக்குனர் வசந்த பாலன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை நடைபெற்ற உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கான இலவச சிறப்புக் காட்சியில் தொழிலாளர்கள் பலரும் கண்கலங்கி எங்களின் குரல்,வலி,வாழ்க்கை திரையில் வலிமையாக ஒலித்திருக்கிறது என்று நன்றி கூறினர்.” என்று கூறியுள்ளார்.

 

Related post