ரசிகர்களின் வாழ்த்து மழையில் “இசைப்புயல்”

 ரசிகர்களின் வாழ்த்து மழையில் “இசைப்புயல்”

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது 56-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தன் இசையால், தமிழகத்தை மட்டுமல்ல உலகின் பல மொழி ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்துள்ளார்.

தமிழ் மொழியில் பெரும் ஈர்ப்புக் கொண்டவர். இவரது பிறந்தநாள் தினத்தையொட்டி பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ஏ.ஆர் ரகுமான் இதுவரை 6 தேசிய விருதுகள், 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள் என பல விருதுகளை பெற்று இசை உலகத்தில் தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார்.

தமிழன் வளர்ந்தால் தமிழ் தானாக வளரும் என்பதற்கேற்ப, உலக அரங்கில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற தாய்தமிழை உரக்கக் கூறியவர் ஏ ஆர் ரகுமான்.

Full On Cinema குழுமம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏ ஆர் ரகுமான் அவர்களே…

 

Related post