மீண்டும் இணைந்த “ஈரம்” கூட்டணி!

 மீண்டும் இணைந்த “ஈரம்” கூட்டணி!

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கியவர் அறிவழகன். தமிழ் ராக்கர்ஸ் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இப்படங்களைத் தொடர்ந்து தற்போது பார்டர் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சப்தம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், தமன் இசையமைப்பாளராக பணியாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரம் படத்திற்குப் பிறகு மீண்டும் அறிவழகனோடு ஆதி கைகோர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post