மகாமுனி சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் “ரசவாதி”!!

 மகாமுனி சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் “ரசவாதி”!!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் நடந்து செல்பவர் இயக்குனர் சாந்தகுமார். இதற்கு இவர் இயக்கிய மெளன குரு மற்றும் மகாமுனி படங்களே சாட்சி..

இந்த இரு படங்களையும் பாராட்டாதவர்கள் எவரும் இல்லை என்று கூறலாம். மகாமுனி திரைப்படம் பல விருதுகளையும் வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது இன்னமும்.

இந்நிலையில், தனது அடுத்த படத்தினை முடித்திருக்கிறார் சாந்தகுமார். அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு “ரசவாதி” என டைட்டில் வைத்துள்ளார் சாந்தகுமார்.

இயக்குனராக மட்டுமல்லாமல், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார் சாந்தகுமார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது..

 

Related post