அஸ்வின்ஸ் விமர்சனம் 

 அஸ்வின்ஸ் விமர்சனம் 

வசந்த் ரவி, சரஸ் மேனன், முரளிதரன் , உதயாதீப் நடிப்பில், தருண் தேஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அஸ்வின்ஸ்”.

எதை பேசுகிறது இப்படம்?

ப்ளாக் டூரிசம் என்ற ஒரு சுற்றுலாவை மையமாக வைத்து அதில் புனையப்பட்ட சுவாரசியமான கதையை பேசுகிறது இப்படம்.

ப்ளாக் டூரிசம் என்றால் என்ன?

ஆமானுஷ்யங்களும், திகில் சம்பவங்களும் நடக்கும் ஒரு இடத்திற்கு சுற்றுலாவாக செல்லும் ஒரு வழக்கத்தை தான் “ப்ளாக் டூரிசம்” என்கிறார்கள்.

கதைப்படி,

வசந்த் ரவி, சரஸ் மேனன், முரளிதரன் , உதயாதீப் உள்ளிட்ட யூடியூப் சேனல் நடத்தும் ஐவர் குழு லண்டனில் தனித்த தீவில் உள்ள அமானுஷ்ய மாளிகைக்குப் பயணிக்கிறது.

அங்கே தங்கி இருந்து அமானுஷ்யங்கள் பற்றி ஆராய்ந்த ஆர்த்தி என்பவரும் அவருடன் இருந்த 15 பேரும் அகால மரணம் அடைய, ஆர்த்தியும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

அந்த இடத்துக்கு இவர்கள் ஏன் பயணிக்க வேண்டும்..?

அமானுஷ்ய இடங்களுக்கு இவர்களை வரவேற்பதற்கென்று சில ப்ரோமோட்டார்கள் இருக்க, அப்படி இந்த இடத்தைப் படம் பிடிக்க, இந்த யூடியூப் கோஷ்டியும் அசைன்மென்ட்டும் பெரிய தொகையும் கிடைக்க அதற்காக இவர்கள் அங்கே வருகின்றனர். வந்த இடத்தில் அமானுஷ்யத்தில் அவர்களும் சிக்கிக் கொள்ள என்ன நடந்தது என்பதே மீதிக் கதை.

இப்படத்தின் கதையானது பலரும் அறியாத ஒரு படமான “சிவி – 2” படத்தின் கதை போல் இருந்தாலும். எந்த வகையில் இப்படம் நம்மை திகிலடைய செய்து, மிரட்டி, சுவாரஸ்யமாக ரசிக்க வைத்தது என்பது தான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.

இம்முறையும் மிக சரியான ஒரு கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார் வசந்த் ரவி. குறிப்பாக, அவர் மாளிகைக்குள் செல்லும் முன் அவருக்கு நேரும் அமானுஷ்யம், மாளிகைக்கு சென்ற பின் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி, அதன் பின் அதை சாமாளித்த விதம் என பல இடங்களில் ஸ்கோர் செய்து அசத்தியுள்ளார் வசந்த் ரவி.

மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து நம்மை திகைக்க வைத்திருக்கிறார் விமலா ராமன்.

வசந்த் ரவி உடன் நடித்த அனைவரும் டைரக்டரின் ரைட் சாய்ஸ்.

பேய் படம், திகில் படம் என்றாலே முக்கிய பங்கு ஒலிக்கும், ஒளிக்கும் தான். இப்படத்தில் அவை இரண்டும் சரியாக அமைந்துள்ளது.

விஜய் சித்தார்த்தின் மிரட்டலான இசை நம்மை பதைபதைக்க வைக்கிறது.

எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு, வியக்கும் வகையில் நம்மை படத்தை ரசிக்க வைத்துள்ளது.

தருண் தேஜாவின் கதைக்களம் கடந்த காலம், நிகழ் காலம் என இரண்டு பாதிகளாக பிரித்து திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. அதை புரியும் வகையில் அமைத்தது மிக சிறப்பு.

அங்கங்கே ஒரு சில குறைகள் இருந்தாலும் அவை அனைத்தும் கவனிக்கப்படாத ஒன்றாக தான் அமைந்துள்ளது.

இப்படத்தை தயாரித்த SVCC நிறுவனத்தின் “விரூபாக்ஷா” படத்தை தொடர்ந்து இப்படமும் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

அஸ்வின்ஸ் – ஒலியும், ஒளியும் – (3.25/5)

Related post