அஜித்குமார் படத்தில் ஜி பி முத்து.. அடித்த ஜாக்பாட்!

 அஜித்குமார் படத்தில் ஜி பி முத்து.. அடித்த ஜாக்பாட்!
Digiqole ad

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தில் பிரபல யூ டியூபர் ஜி பி முத்துவும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாநிலத்தில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தில் ஜி பி முத்துவும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Digiqole ad
Spread the love

Related post