60 நாட்கள் திருநெல்வேலியில் தான் படப்பிடிப்பு; “பைசன்” அப்டேட்!

 60 நாட்கள் திருநெல்வேலியில் தான் படப்பிடிப்பு; “பைசன்” அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அழகம் பெருமாள், லால், கலையரசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ”பைசன்”.

படத்தின் படப்பிடிப்பானது நேற்று திருநெல்வேலியில் ஆரம்பமானது. தொடர்ந்து 60 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

அதற்குபிறகு சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை தான் இப்படத்தின் கதை என்கிறார்கள்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் பேசு பொருளாகி நல்லதொரு வெற்றியையும் பெற்றிருப்பதால், பைசன் படத்தின் மீதும் அனைவருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

Related post