மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் “பைசன்”

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் “பைசன்”

மாமன்னன் திரைப்படத்திற்குப் பிறகு வாழை என்ற படத்தினை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

விரைவில் வாழை வெளியாக இருக்கும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். படத்திற்கு “பைசன் – காளமாடன்” என்று டைட்டில் வைத்து முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியிருக்கிறார். அப்ளாஸ் ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

கபடி விளையாட்டை மையப்படுத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கவிருக்கிறார். லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், அழகம்பெருமாள் உள்ளிட்ட நட்சத்திரங்களும் படத்தில் இருக்கின்றனர்.

 

Related post