விஜய் படத்தில் தோனி & ரெய்னாவா.??

 விஜய் படத்தில் தோனி & ரெய்னாவா.??

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பானது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் ஸ்காட்லாந்து, இலங்கை, ஹைதரபாத், திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், கோட் படத்தில் மகேந்திர சிங் தோனி நடிப்பதாக செய்திகள் உலா வந்தது. சிலர் அதை மறுத்த நிலையில், ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற தகவலும் பரவ தொடங்கியுள்ளது.

தோனி மட்டுமல்லாமல் கூடவே ரெய்னாவும் தோன்ற அதிக வாய்ப்பிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தோனியும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் வெங்கட் பிரபு தீவிரமான சி எஸ் கே ரசிகர் என்பதாலும் இது நடக்க 100 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Related post