“சத்யா” லுக்கில் கமல்ஹாசன்; வைரலாகும் தக் லைஃப் ஷுட்டிங் புகைப்படம்!

 “சத்யா” லுக்கில் கமல்ஹாசன்; வைரலாகும் தக் லைஃப் ஷுட்டிங் புகைப்படம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். படப்பிடிப்பானது தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது. அதில், நடிகர் கமல்ஹாசன் சத்யா படத்தில் இருந்தது போன்ற லுக்கில் இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், நடிகர் சிம்புவும் காளை படத்தில் இருந்த லுக்கில் இருப்பது போலவும் உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரும் வைரலாகி வருகிறது. 

மிகப்பெரும் சம்பவத்தை மணிரத்னம் செய்யவிருக்கிறார் என்று இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Related post