செவ்வாய்கிழமை விமர்சனம்

 செவ்வாய்கிழமை விமர்சனம்

இயக்கம் : அஜய் பூபதி

நடிகர்கள்: பயல் ராஜ்பூட், ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ்

இசை: அஜனீஷ் லோக்நாத்

ஒளிப்பதிவு: தசரதி சிவேந்திரா

கதைப்படி,

1990-களில் நடக்கும் கதை தான் இந்த செவ்வாய்கிழமை. தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது.

ஊரில் ஒரு மர்ம நபர் பொது சுவற்றில் ளதோ இருவருக்கு கள்ளக்காதல் என்று எழுதி வைக்கின்றார். அதே நேரத்தில் அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடக்கிறது அதுவும் செவ்வாய்கிழமைகளில் மட்டும்.

இதனால் ஊர் மக்கள் அதிர்ச்சியாகின்றனர். மரண பயத்தில் அனைவரும் இருக்கின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் நந்திதா ஸ்வேதா. அவர் விசாரணையில் கண்டுபிடித்தார்? செவ்வாய்க்கிழமை குறி வைத்து நடப்பது ஏன்? செவ்வாய்க்கிழமைக்கும் கொலைக்கும் என்ன தொடர்பு என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக பாயல் ராஜ்புட். கதையின் நாயகியாக படத்தில் ஜொலித்திருக்கிறார். இந்த கதைக்கு இவரை விட்டால் வேறு யாருப்பா பொருத்தமா இருப்பா என கேட்கும் அளவிற்கு கச்சிதமாகவும் நச்செனவும் நடித்து சூடாக்கியிருக்கிறார் கதாபாத்திரத்தை.

நாயகியின் காதலன் நம்மை நடிப்பில் கண் கலங்க வைக்கிறார். அதே சமயம் ஆக்ஷனிலும் அடி தூள் கிளப்பி இருக்கிறார்.

ஆசிரியராக வரும் அஜ்மல் அமீர் கொஞ்ச நேரம் என்றாலும் வித்தியாசமான வேடம். பெண்களை தன் ஆசை வலையில் விழ வைத்து கழட்டிவிடும் வித்தியாசமான வேடம் ஏற்றிருக்கிறார் அஜ்மல்.

இவர்களுடன் சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஸ், லக்ஷ்மன் உள்ளிட்டோ ரூம் தங்கள் வேடங்களில் கச்சிதம்.. மிகை இல்லாத நடிப்பை கொடுத்துள்ளனர்.

காந்தாரா படத்திற்கு இசையமைத்தவர் தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஒரு திரில்லர் பாணியில் கதையை சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

திரைக்கதையில் பல திருப்பங்களை வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவும் மேக்கிங் வேற லெவல் என்றே சொல்லலாம். இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீளம் இருந்தாலும் கொலைக்கான காரணம் குற்றவாளிகள் யார் என்பதை எல்லாம் சொல்லி இருப்பதால் ரசிக்க முடிகிறது.

கள்ளக்காதலை குறி வைத்து எடுக்கப்பட்ட செவ்வாய்கிழமை ஒரு ரசனை தான்

Related post