யுவன் வாசிக்க, அனிருத் பாட, தளபதி ஆட.. செம அப்டேட்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “தளபதி 68”. வெளிநாடுகளில் நடைபெற்ற படபிடிப்பானது, முடிவடைந்தது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.
அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது. முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நடைபெற்றிருந்த நிலையில், அங்கு பாடல் ஒன்று படமாக்கப்பட்டது.
அதில், அனிருத் குரலில் அந்த பாடல் உருவாகியுள்ளது. ரசிகர்கள் குத்தாட்டம் போடும்படியாக அந்த பாடல் இருக்கும் என்கிறார்கள். விரைவில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.