சினிமா தொழிலாளர்களுக்கு பல கோடி செலவில் மருத்துவமனை.. நடிகர் சிரஞ்சீவி அறிவிப்பு!

 சினிமா தொழிலாளர்களுக்கு பல கோடி செலவில் மருத்துவமனை.. நடிகர் சிரஞ்சீவி அறிவிப்பு!

நடிகர் சிரஞ்சீவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக இன்று அவர் நடித்திருக்கும் காட் ஃபாதர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று மருத்துவமனை ஒன்றை கட்ட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுகிறாராம். ஐதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் இது அமைகிறது. இந்த மருத்துவமனை கட்ட தெலுங்கு கிரிக்கெட் சங்கம் சிரஞ்சீவி மருத்துவ அறக்கட்டளைக்கு 20 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

”நான் சம்பாதித்தது எல்லாம் சினிமாவில்தான். சினிமா தொழிலாளர்களின் உழைப்பால்தான். அதை அவர்களுக்கு சிறிதளவேனும் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறேன். எத்தனை கோடி செலவானாலும் இதை கட்டி முடிப்பேன்” eன்று கூறியிருக்கிறார் சிரஞ்சீவி.

 

Related post