வெளியானது “ஜெயிலர்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகும் படம் தான் “ஜெயிலர்”. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.,
இன்று சென்னையில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இதற்காக சென்னையில் ஜெயில் போன்ற செட் ஒன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.
இயக்குனரும் சூப்பர் ஸ்டாரும் இப்படத்தில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.