நானியின் “தசரா” ஓடிடி ரிலீஸ் எப்போது.?

 நானியின் “தசரா” ஓடிடி ரிலீஸ் எப்போது.?

அறிமுக இயக்குனரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரிணா வஹாப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் “தசரா”.

சுமார் 65 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி க்ளப்பில் இணைந்தது. சில விமர்சனங்கள் எதிராக இருந்தாலும், வசூலில் எந்தவித குறையும் வைக்காமல் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படம்.

திரையரங்கிற்கு சென்று பார்க்காமல் இருக்கும் ரசிகர்கள், படம் எப்போது ஓடிடி’யில் வெளியாகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக, இம்மாதம் ஏப்ரல் 27ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related post